/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொளப்பலுார் டவுன் பஞ்., தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு
/
கொளப்பலுார் டவுன் பஞ்., தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு
கொளப்பலுார் டவுன் பஞ்., தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு
கொளப்பலுார் டவுன் பஞ்., தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு
ADDED : ஆக 15, 2025 02:12 AM
ஈரோடு, கொளப்பலுார் டவுன் பஞ்., தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, சிறப்பு கூட்டம் நடத்தக்கோரி, ஈரோடு கலெக்டரிடம், கவுன்சிலர்கள் மனு வழங்கினர்.
கொளப்பலுார் டவுன் பஞ்., தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த அன்பரசு செயல்படுகிறார். டவுன் பஞ்.,ல், 15 கவுன்சிலர்களில், அ.தி.மு.க., - 5, தி.மு.க., - 8, மற்றவர்கள் இருவர் உள்ளனர். இவர்களில், 13 பேர் ஈரோடு கலெக்டர் கந்தசாமி, டவுன் பஞ்., உதவி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: கவுன்சிலர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தலைவர் செயல்படுகிறார்.
மன்ற ஒப்புதல் பெறாமல் விஸ்தரிப்பு பணிகளை மேற்கொண்டு, நிதியிழப்பை ஏற்படுத்துகிறார். தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என மக்கள் எங்களிடம் முறையிடுகின்றனர். இதுபற்றி தலைவரிடம் தெரிவித்தால் தரக்குறைவாக பேசுகிறார். மன்ற பதிவேடு, செலவு சீட்டு விபரங்களை பார்வையிட வழங்குவதில்லை.
எனவே தலைவர் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மனுவில் கவுன்சிலர்கள் சதாசிவம், சுமதி, மனோகரன், நாகஜோதி, பழனியம்மாள், ராதா, லட்சுமி, பானுமதி, சத்யா, குமரேசன், தங்கராஜ், அருள்மொழி, செல்வராஜ் என, 13 பேர் கையெழுத்திட்டுள்ளனர். மனுவை பெற்ற கலெக்டர் கந்தசாமி, ''சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்