/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதுகாப்பற்ற பூங்காவை தடை செய்ய கோரி மனு
/
பாதுகாப்பற்ற பூங்காவை தடை செய்ய கோரி மனு
ADDED : ஜூலை 08, 2025 01:34 AM
ஈரோடு :நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் - குமாரபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்த கிருத்திகா, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:
மேட்டுக்கடை அருகே எங்களுக்கு சொந்தமான இடத்தில் தனியார் சிறுவர் பூங்கா செயல்படுகிறது. கடந்த, 2011ல் எனது தந்தை உயிருடன் இருந்தபோது, அவ்விடத்தை வாடகைக்கு பெற்றனர். நீச்சல் குளம், விளையாட்டு பொருட்களை அரசு அனுமதி பெற்று, வைத்து செயல்படுத்துவதாக கூறினர்.
எனது தந்தை, 2020ல் இறந்ததால், 2023ல் லிங்கேஸ்வரன் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தில், இச்சிறுவர் பூங்கா பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான பதிலில், சிறுவர் பூங்கா எவ்வித அனுமதியும் பெறவில்லை என தெரிவித்திருந்தனர். இருப்பினும் வார இறுதி நாட்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பூங்காவில் விளையாடி வருகின்றனர். அங்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலை, விளையாட்டு உபகரணங்களும் சரியாக இல்லை. எனவே சிறுவர் பூங்காவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

