/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாயகம் திரும்பியோர் பட்டா கேட்டு மனு
/
தாயகம் திரும்பியோர் பட்டா கேட்டு மனு
ADDED : டிச 03, 2024 07:21 AM
ஈரோடு: தாயகம் திரும்பியோர் மக்கள் கூட்டமைப்பு சார்பில், வனிதகு-மாரி தலைமையில்,
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: நாங்கள் இலங்கையில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தாயகம் திரும்பியவர்கள்.
மலையக தோட்ட தொழிலாளர்களான எங்க-ளுக்கு அனைத்து உதவிகளும் செய்து
தருவதாக அழைத்து வந்-தனர். ஆனால் குடியிருக்க ஒரு சென்ட் நிலம் கூட
இல்லாமல் சிர-மப்படுகிறோம். நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்ப-வர்கள். எங்களிடம் ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை என அனைத்தும் உள்ளது.
நாங்கள், இங்கு வந்தது முதல் ஓட்டுப்-போட்டு வருகிறோம். ஆனாலும், எங்களுக்கு
அரசு சார்பில் உத-விகள் செய்ய மறுக்கிறது. தற்போது, 3, 4, 5வது தலைமுறையாக
வசிக்கிறோம். கடந்த, 2007ல் வடமுகம் வெள்ளோடு கிராமத்தில், இலவச
வீட்டுமனை பட்டாவை அரசு வழங்கியது. ஆனால் அரசே திரும்ப பெற்று கொண்டது. இப்பகுதியில் வசிக்கும், 364 நபர்களுக்கு பட்டா கொடுத்து-விட்டு, மறுக்கும் நிலையை
மாற்றி, வடமுகம் வெள்ளோடு, தென்முகம் வெள்ளோடு, சென்னிமலை ஈங்கூர் என
எங்காவது பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு கேட்டு கொண்டனர்.