ADDED : அக் 07, 2026 06:29 AM
அ நிறம் | அளவு
அந்தியூ:வெள்ளித்திருப்பூரை
அடுத்த முத்துகவுண்டன்புதுாரை சேர்ந்த மக்கள், அந்தியூர் தாலுகா
அலுவலகத்தில் தாசில்தார் சக்திவேலிடம், நேற்று மனு அளித்தனர்.
மனுவில்,
முத்துகவுண்டன்புதுாரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்
வசிக்கிறோம். செம்முனீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ள எங்கள்
ஊருக்கு சாலை வசதி இல்லை. ஊருக்கு செல்லும் வழியில் தனி நபர்கள், ஓடை
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பை அகற்றி
சாலை அமைத்துத் தர வேண்டும். இதுகுறித்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக,
அதிகாரிகளிடம் மனு கொடுத்து போராடி வருகிறோம். புறம்போக்கு
நிலத்தை அளவீடு செய்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு
மனுவில் தெரிவித்துள்ளனர்.
