/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காமாட்சிபுரத்தில் தெருவிளக்கு வசதி கேட்டு கலெக்டரிடம் மனு
/
காமாட்சிபுரத்தில் தெருவிளக்கு வசதி கேட்டு கலெக்டரிடம் மனு
காமாட்சிபுரத்தில் தெருவிளக்கு வசதி கேட்டு கலெக்டரிடம் மனு
காமாட்சிபுரத்தில் தெருவிளக்கு வசதி கேட்டு கலெக்டரிடம் மனு
ADDED : ஏப் 29, 2025 01:32 AM
கரூர்:
கூடலுார் கிழக்கு பஞ்.,க்குட்பட்ட காமாட்சிபுரத்தில், தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என, அகில் இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை மாநில பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
அரவக்குறிச்சி அருகில் கூடலுார் கிழக்கு பஞ்.,க்குட்பட்ட காமாட்சிபுரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள நான்கு வீதிகளில், இரண்டு வீதிகளில் தெருவிளக்கு வசதியில்லை.
இதனால், இரவு நடமாட முடியாமல் உள்ளது. இரவு நேரத்தில் பெண்கள் நடந்து சென்றால் வழிப்பறி நடக்கும் என்ற அச்சத்தில் செல்ல வேண்டி உள்ளது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல், முதல்வர் தனிப்பிரிவு வரை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து தெரு விளக்கு இல்லாமல், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. மாவட்ட நிர்வாகத்தினர் நேரில் கள ஆய்வு செய்து, தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

