ADDED : ஆக 08, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட ஓம் காளியம்மன் கோவில் வீதியை
சேர்ந்த மக்கள், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில்
கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள்
உள்ளன. ஆனால் முறையான தார்ச்சாலை வசதி இல்லை. ஊராட்சிக்கோட்டை
குடிநீர் கிடைக்காததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சாக்கடை
வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் வெளியேற்றப்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை மேற்கொள்ள
வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
