ADDED : மார் 07, 2026 04:13 AM

அ நிறம் | அளவு
ஈரோடு: மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை மூலம், 67 பயனாளிகளுக்கு, 68.20 லட்சம் ரூபாய் மதிப்பில்
இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும்
நிகழ்ச்சி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி
தலைமை வகித்தார்.
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், துணை மேயர்
செல்வராஜ் முன்னிலை வகித்தனர். இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட
பெட்ரோல் ஸ்கூட்டரை, அமைச்சர் முத்துசாமி வழங்கினார். பின்,
அவர்களது கோரிக்கை, குறைகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
