தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்


ADDED : அக் 14, 2026 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2026 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்,:கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து தக்காளி லோடு ஏற்றிய ஒரு பிக்-அப் வேன், மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் நேற்று காலை, 8:30 மணிக்கு, நான்காவது கொண்டை ஊசி வளைவில் வந்தது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது.

டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அதேசமயம் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் இரண்டு லாரிகள் பஞ்சராகி நின்றதால் மலைப்பாதையில் போக்குவரத்து தடைபட்டது.

மதியம், 3:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடை ஏற்றிக்கொண்டு, மலைப்பாதையில் வாகனங்கள் வருவது மீண்டும் வழக்கமாகி விட்டது. இதனால் தினமும் விபத்து நடப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us