ADDED : ஏப் 23, 2026 04:27 AM

காங்கேயம்:காங்கேயம் தொகுதியில், பெண்களை கவுரவிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தால் பிரத்யேகமாக 'பிங்க்' பூத் அமைக்கப்பட்டுள்ளது.
பிங்க்
பூத் மையங்கள் முழுவதும், வண்ணமயமான அலங்காரம் மற்றும்
தோரணங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன, இந்த மையங்களில்
பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், போலீசாரும், பெண்கள் என்பது
குறிப்பிடத்தக்கது, காங்கேயம் தொகுதியில் காளிமேடு பகுதியில்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள, 168வது ஓட்டுச்சாவடி,
வெள்ள
கோவிலில் அமலா அன்னை மகளிர் உயர்நிலைப் பள்ளியில் உள்ள,
295வது ஓட்டுச்சாவடியில் பிங்க் பூத் அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களின் ஓட்டுகளை ஊக்குவிக்கவும், அவர்களை தேர்தல்
செயல்முறையில் பங்கேற்க செய்யவும் இந்த முயற்சி
எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
* ஈரோடு கிழக்கு
தொகுதியில், சம்பத்நகரில் உள்ள அம்மன் பள்ளியில் பெண் வாக்காளர்களை
கவரும் விதமாக, 'பிங்க் பூத்' அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள
சுவர்கள், தரை விரிப்பு, டேபிள், சேர் என அனைத்தும் பிங்க் நிறத்தில்
உள்ளன.
