/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரி நிறுவனர் தின விழா
/
பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரி நிறுவனர் தின விழா
ADDED : ஆக 29, 2025 01:36 AM
ஈரோடு,  கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரி நிறுவனர் தின விழா நேற்று நடந்தது. கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். கல்லுாரி துணை தனலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் எஸ்.பி.எஸ்., குழும நிறுவனங்களின் தலைவர் பொன்னுசாமி கலந்நு கொண்டார்.
ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வரும் கல்வி கொடையாளர், ௧4 -பேர் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.  பி.ஆர்.நடராஜன் அறக்கட்டளை நிதியிலிருந்து கல்வி ஊக்கத் தொகை, பிளஸ் ௨ தேர்வில், 500க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், இளங்கலை வகுப்பில், 85 சதவீத  மதிப்பெண்கள் பெற்று முதுகலை முதலாமாண்டு பயின்று வரும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
விளையாட்டு துறையை சேர்ந்த முழு சலுகை பெறும் மாணவிகளுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மானஸ் அறக்கட்டளை நிறுவனர் சசிபிரபா, கோபி  அபி எஸ்.கே., மருத்துவமனை நிறுவனர் செந்தில்நாதன் ஆகியோர், கல்லுாரி நிறுவனரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் அனைத்து துறை முதன்மையர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நிறுவனர் ஐயாவின் தோழர்கள், குடும்ப உறுப்பினர்கள், மாணவியர் என, 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

