/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உறைவிட வசதியுடன் வேலை வாய்ப்பு பயிற்சி
/
உறைவிட வசதியுடன் வேலை வாய்ப்பு பயிற்சி
ADDED : ஜூன் 11, 2025 01:35 AM
ஈரோடு, கிராமப்புற இளைஞர்களின் சுயவேலைவாய்ப்புக்காக, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம், உறைவிட வசதியுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
செல்போன் பழுது நீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, பிளம்பிங், வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் - கொத்தனார் பயிற்சி, தச்சு, டூவீலர் பழுது நீக்குதல், ஒயரிங், வெங்டிங் என, 64 வகை சுய வேலைவாய்ப்பு பயிற்சி கட்டணமின்றி, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
அனைத்து கல்வி தகுதி உடையவர்களும் பயன் பெறலாம். 10 முதல், 45 நாட்கள் வரை பயிற்சி வழங்கப்படும். இதுபற்றிய விபரங்களை, 'இயக்குனர், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், கொல்லம்பாளையம், ஈரோடு மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், பூமாலை வணிக வளாகம், குமலன்குட்டை' என்ற முகவரிகளில் பெறலாம்.