/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேனில் பிளக்ஸ் பேனர்: ஓட்டுனர் மீது வழக்கு
/
வேனில் பிளக்ஸ் பேனர்: ஓட்டுனர் மீது வழக்கு
ADDED : மார் 28, 2024 07:08 AM
ஈரோடு : பொலிரோ பிக் அக் வேனில், இரு பிளக்ஸ் பேனர்களை அனுமதியின்றி கட்டி சென்ற டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.லோக்சபா தேர்தல் நடப்பதை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.
இந்நிலையில், பெரம்பலுாரில் இருந்து ஈரோடு வழியே ஊட்டி செல்ல, கருங்கல்பாளையம் காவிரி செக்போஸ்ட் பகுதிக்கு நேற்று காலை பொலிரோ பிக் அப் வேன் வந்தது. அதன் இருபுறமும் நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜாவின் படம், ஓட்டு கேட்டு வாசகம் எழுதிய பிளக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டு இருந்தது.இதுபற்றி, கருங்கல்பாளையம் போலீசார் கேள்வி எழுப்பினர். வேனில் பிளக்ஸ் பேனர் கட்டி செல்ல எவ்வித அனுமதியும் பெறாதது தெரியவந்தது. இதையடுத்து, பெரம்பலுார் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த ஜீப் டிரைவர் மணிகண்டன், 35, மீது கருங்கல்பாளையம் போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறை மீறி, எவ்வித அனுமதியும் பெறாமல் பிளக்ஸ் பேனர் கட்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

