/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனப்பகுதி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்
/
வனப்பகுதி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்
ADDED : ஜூலை 20, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பு கொண்டாது. வனப்பகுதி வழியாக செல்லும் காங்கேயம் பிரதான சாலையின் இருபுறமும், பல மாதங்களாக பிளாஸ்டிக் கழிவு அகற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில் வனத்துறை, ஈரோடு சிறகுகள் அமைப்பு, பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் இணைந்து, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். வனப்பகுதி வழியே செல்வோர், சாலையோரங்களில் குப்பை கொட்டினால், வனச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.