/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 1, 10ம் வகுப்பு துணைத்தேர்வு தொடக்கம்
/
பிளஸ் 1, 10ம் வகுப்பு துணைத்தேர்வு தொடக்கம்
ADDED : ஜூலை 03, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:பிளஸ்
1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்,
தேர்வுக்கு வராதவர், தனி தேர்வர்களுக்கான துணை தேர்வு துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 துணை தேர்வு ஈரோடு காமராஜர்
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி, கோபி நகராட்சி மேல்நிலைப்பள்ளி,
சத்தியமங்கலத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஏழு
மையங்களிலும், பத்தாம் வகுப்பு துணைத்தேர்வானது ஈரோடு, பவானி,
அந்தியூர், கோபி, சத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்பது மையங்களிலும்
துவங்கியது.