ADDED : மார் 28, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுதேர்வு கடந்த 2ல் துவங்கி 26ல் நிறைவு பெற்றது. 23,307 மாணவ, மாணவிகள், தனி தேர்வர்கள் 669 பேர் தேர்வு எழுதுகின்றனர். விடைத்தாள்கள் கோபி அமலா பள்ளி, அந்தியூர் மங்களம் பள்ளி, ஈரோடு கிறிஸ்து ஜோதி பள்ளி, கார்மல் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை அறிவிக்கும் மாவட்டத்-துக்கு, விடைத்தாள்கள் இன்று கொண்டு செல்-லப்படும். பிற மாவட்டத்துக்குரிய பிளஸ் 2 விடைத்தாள் இன்று அல்லது 30ல், விடைத்தாள் திருத்தும் மையங்களான கோபி அமலா பள்ளி, ஈரோடு கிறிஸ்து ஜோதி பள்ளி, கார்மல் பள்ளிக்கு கொண்டு வரப்படும். ஏப்.,8ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று, பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.
