ADDED : மார் 27, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுதேர்வு கடந்த, 2ல் துவங்-கியது. மாணவர், மாணவியர், தனி தேர்வர் 669 பேர் என, 23,307 பேர், 109 மையங்களில் தேர்வு எழுதினர். அனைத்து பிரி-வுகளுக்கும் நேற்று தேர்வு முடிவுக்கு வந்தது.
தேர்வு நிறைவு பெற்ற பின் மதியம், 1:15 மணிக்கு வந்த மாணவ, மாணவியர் மொபைல்போனில் செல்பி எடுத்தும், ஒரு-வருக்கொருவர் கைகுலுக்கியும் மகிழ்ச்சியை பரிமாறி கொண்-டனர்.நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வில் எவ்வித முறைகேட்டிலும் மாணவ, மாணவியர், தனி தேர்வர் ஈடுபடவில்லை. முறைகேடு தொடர்பாக ஒரு புகாரும் பதிவாகவில்லை என்று பள்ளி கல்வி துறையினர் தெரிவித்துள்ளனர். பிரச்னை, முறைகேடு ஏதுமின்றி தேர்வு முடிந்ததால், பள்ளி கல்வி துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
