ADDED : மார் 27, 2026 05:15 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுதேர்வு கடந்த, 2ல் துவங்கியது. மாணவர்,
மாணவியர், தனி தேர்வர் 669 பேர் என, 23,307 பேர், 109 மையங்களில் தேர்வு
எழுதினர். அனைத்து பிரிவுகளுக்கும் நேற்று தேர்வு முடிவுக்கு வந்தது.
தேர்வு
நிறைவு பெற்ற பின் மதியம், 1:15 மணிக்கு வந்த மாணவ, மாணவியர்
மொபைல்போனில் செல்பி எடுத்தும், ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும்
மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.
நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வில்
எவ்வித முறைகேட்டிலும் மாணவ, மாணவியர், தனி தேர்வர் ஈடுபடவில்லை.
முறைகேடு தொடர்பாக ஒரு புகாரும் பதிவாகவில்லை என்று பள்ளி கல்வி
துறையினர் தெரிவித்துள்ளனர். பிரச்னை, முறைகேடு ஏதுமின்றி தேர்வு
முடிந்ததால், பள்ளி கல்வி துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
