/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2 பிராக்டிகல் 7ம் தேதி துவக்கம்
/
பிளஸ் 2 பிராக்டிகல் 7ம் தேதி துவக்கம்
ADDED : பிப் 01, 2025 07:00 AM
திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 3ல் துவங்குகிறது. செய்முறை தேர்வுகளை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை முடிக்க தேர்-வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் அறிவுறுத்தலில், மேல்நிலை, உயர்-நிலை பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஜரூராகியுள்ளது.
வரும், 7 முதல், 22ம் தேதி வரை பள்ளிகளில் உள்ள அறி-வியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், டைப் ரைட்டிங் உள்ளிட்ட பாடப்-பிரிவுகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட நாட்களுக்கு செய்முறைத் தேர்வு-களை நடத்த முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இதற்காக பள்ளி ஆய்வகங்கள், கணினி அறை உள்ளிட்ட-வற்றை தயார்படுத்தும் பணி துவங்கியுள்ளது. தேர்வுக்கு ஒரு நாள் முன்பாக பள்ளியில் மின்பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பிளஸ், 2 செய்முறை தேர்வு துவங்குகிறது.