ADDED : ஜூன் 03, 2026 03:25 AM
ஈரோடு:சேலம் தீவட்டிபட்டியை சேர்ந்த முனியப்பன் மகன் வல்லரசு, 19; கூலி தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த 9ம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியை திருமணம் செய்தார். சிறுமி, 2 மாத கர்ப்பமானார்.
இதை அறிந்த ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ், வல்லரசு மீது வழக்குப்பதிந்தனர்.* புதுக்கோட்டையை சேர்ந்த முத்தரசு மகன் தண்டாயுதபாணி, 29. மலையம்பாளையம் அடுத்த மடத்துபாளையத்தில் உள்ள சமோசா கம்பெனியில் வேலை செய்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும், 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்தார். 17 வயது இளம்பெண் அளித்த புகாரின் படி, தண்டாயுதபாணி, அவரது தாய் நாகவள்ளி, பெண்ணின் பெற்றோர் மீது குழந்தை திருமண தடை பிரிவுகளும், தண்டாயுதபாணி மீது கூடுதலாக போக்சோ பிரிவின் கீழும் மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
