ADDED : செப் 04, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து நெருங்கி பழகி வந்துள்ளார்.
இதில் சிறுமி மூன்று மாத கர்ப்பிணியானதை தொடர்ந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இருந்து அங்கிருந்த அதிகாரிகளின் தகவல் அடிப்படையில், காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட சிறுவன் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.