ADDED : செப் 24, 2026 06:31 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கடலுார் மாவட்டம், கடம்பூர் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், 32. ஈரோடு மாவட்டம் பவானியில், 6 மாதம் தங்கி கூலி வேலை செய்தார்.
அப்போது, 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். கடலுார் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் அளித்தார். போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்தனர். குற்ற சம்பவம் நடந்தது பவானிஎன்பதால், பவானி அனைத்து மகளிர் போலீசுக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
