/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூன்று வாலிபர்கள் மீது போக்சோவில் வழக்கு
/
மூன்று வாலிபர்கள் மீது போக்சோவில் வழக்கு
ADDED : ஜன 26, 2026 04:25 AM
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் இம்தியாஸ், 29; கார்பெண்டரான இவர், 17 வயது சிறுமியை திரு-மணம் செய்து கொண்டார். குழந்தைகள் நல குழுவினர் புகாரின்-படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், இம்தியாஸ் மீது வழக்குப்பதிந்தனர். இதற்கு உடந்தையாக இருந்த வாலிபரின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் மீது, குழந்தை திருமண தடை சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.
* தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் சூர்யா, 21; சிப்ஸ் போடும் வேலை செய்தார். பவானியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமி-யுடன் பழகி கர்ப்பமாக்கினார். சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது-குறித்து புகாரின்படி பவானி அனைத்து மகளிர் போலீசார், சூர்யா மீது வழக்குப்பதிந்தனர்.
* பெருந்துறை தோப்பு
பாளையம் ஆதி திராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் கவுரி சங்கர், 19; பெட்ரோல் பங்க் ஊழியர். எட்டாம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கினார். குழந்தைகள் நல குழுவினர் அளித்த புகாரின்படி, கவுரி சங்கர் மீது சென்னி
மலை போலீசார் வழக்குப்
பதிவு செய்தனர்.

