ADDED : ஏப் 14, 2026 05:02 AM
ஈரோடு : மொடக்குறிச்சி சாவடிபாளையம் புதுார் பழனிச்சாமி மகன் முருகேசன், 26. செங்கல்சூளை டிரைவர். ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, குழந்தை திருமண தடை சட்ட பிரிவு, போக்சோ பிரிவுகளில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
* மொடக்குறிச்சி பூப்பட்டி வலசு சண்முகம் மகன் பூவரசன், 19; ஐ.டி.ஐ., படித்துள்ளார். தன்னுடன் படித்த, 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார். குழந்தைகள் நல குழுவினர் அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், பூவரசன் மீது போக்சோவில் வழக்குப்பதிந்தனர்.
* ஆப்பக்கூடல் ஓசைப்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தொழிலாளி நந்தகோபால், 28; பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். மருத்துவ பரிசோதனையின் போது சிறுமி என்பது தெரிந்ததால், பவானி அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
