/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியுடன் திருமணம் தொழிலாளிக்கு 'போக்சோ'
/
சிறுமியுடன் திருமணம் தொழிலாளிக்கு 'போக்சோ'
ADDED : நவ 02, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி, பெனஹள்ளியை சேர்ந்தவர் லட்சுமணன், 21; கூலி தொழிலாளி. சமூக வலைதளம் மூலம் ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் பழகியுள்ளார்.
இருவரிடையே பழக்கம் நெருக்கமான நிலையில், ஒரு மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டது குறித்து, குழந்தைகள் நல குழு விற்கு தகவல் கிடைத்தது.
ஈரோடு மகளிர் போலீசார், லட்சுமணன் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

