தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முதியவர் உள்பட மூவர் மீது 'போக்சோ'

முதியவர் உள்பட மூவர் மீது 'போக்சோ'

முதியவர் உள்பட மூவர் மீது 'போக்சோ'


ADDED : அக் 11, 2024 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதியவர் உள்பட

மூவர் மீது 'போக்சோ'

ஈரோடு, அக். 11-

ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; இவர், வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, விசாரணை நடத்திய ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், சுப்பிரமணி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* பவானி, திருவள்ளூவர் நகர், வர்ணபுரம் ஐந்தாவது வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி தட்சிணாமூர்த்தி, 21; இவர் ஈரோட்டை சேர்ந்த, 18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி பவானி அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில், தட்சிணாமூர்த்தி மீது வழக்குப்பதிந்தனர்.

* பெருந்துறை சேனடோரியத்தை சேர்ந்த தொழிலாளி தினேஷ், 22, 16 வயது சிறுமியை திருமணம் செய்த புகாரில், கோபி அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us