ADDED : ஜூலை 17, 2025 01:59 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட போலீசார் சார்பில் போலீஸ் அக்கா திட்டத்தை எஸ்.பி., சுஜாதா தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில், பெண்கள், கல்லுாரி, பள்ளி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல், பிற குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போலீசார் சார்பில் போலீஸ் அக்கா என்ற திட்டம் துவக்கப்பட்டது. மாவட்ட
எஸ்.பி., சுஜாதா தலைமை வகித்து போலீஸ் அக்கா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
திட்டத்தில் பணியாற்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்
களிலும் மகளிர் போலீசாரை நியமித்து, பள்ளி-கல்லுாரிகள், பெண்கள் அதிகம் பணியாற்ற கூடிய தொழிற்சாலைகளுக்கு சென்று போலீஸ் அக்கா திட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் மாணவியருக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கான வழிகாட்டுதல், உதவிகளை வழங்கிடவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடவும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கும், பெண் போலீசாருக்கும்,
எஸ்.பி., சுஜாதா அறிவுரை வழங்கினார்.