/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீமான் எதிர்ப்பாளர்களை பிடித்து சென்ற போலீசார்
/
சீமான் எதிர்ப்பாளர்களை பிடித்து சென்ற போலீசார்
ADDED : ஜன 25, 2025 02:03 AM
ஈரோடு: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈ.வெ.ரா., குறித்து பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசா-ரத்துக்கு நேற்று வந்த சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, பெருந்-துறை சாலையில் அவர் தங்கி இருந்த ேஹாட்டலுக்கு சென்ற ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த ஏழு பேரை போலீசார் மடக்கி பிடித்து, வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அதேபோல் ஆர்.கே.வி., சாலையில் பிரசாரத்துக்கு வந்த போது, சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த கொங்கு விடு-தலை புலிகள் கட்சியை சேர்ந்த இருவரை பிடித்து, டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

