/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொள்ளை வழக்கில் 'டிமிக்கி' இருவரை பிடித்த போலீசார்
/
கொள்ளை வழக்கில் 'டிமிக்கி' இருவரை பிடித்த போலீசார்
கொள்ளை வழக்கில் 'டிமிக்கி' இருவரை பிடித்த போலீசார்
கொள்ளை வழக்கில் 'டிமிக்கி' இருவரை பிடித்த போலீசார்
ADDED : செப் 03, 2025 01:06 AM
திருப்பூர், தாராபுரம் அருகே கொள்ளை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல், ஐந்தாண்டுகளாக தலைமறைவாக இருந்த, இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமசந்திரன், 42. கச்சாத்தநல்லுாரை சேர்ந்தவர் பாண்டி, 46. இவர்கள் மீது கொலை, கொள்ளை உட்பட ஏராளமான வழக்கு உள்ளது.
கடந்த, 2011ல், தாராபுரம், மூலனுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூட்டு கொள்ளையில் ஈடுபட்டனர். இருவரையும், மூலனுார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த, இருவரும் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.
கடந்த, ஐந்து ஆண்டுகளாக விசாரணைக்கு வராமல் போலீசாரிடம் டிமிக்கி கொடுத்த வந்த, இருவரையும் பிடிக்க கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து, தனிப்படையினர் தேடி வந்தனர். அப்போது, மதுரை தெப்பக்குளம் பகுதியில் பதுங்கியிருந்த, இருவரையும் மூலனுார் போலீசார் கைது செய்தனர்.