/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 28, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் போலீசார் நடைமுறை பணிகள் குறித்து, பவானிசாகர் போலீஸ் ஸ்டேசனில், தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விழிப்பு-ணர்வு அளிக்கப்பட்டது.
இதில் ஒரு பகுதியாக நடை முறையில் உள்ள துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தும் முறை, பணி பதிவேடு குறித்து விளக்கம் அளித்தனர். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் காவலன் செயலி குறித்து, இன்ஸ்பெக்டர் அன்னம் தலை-மையிலான போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.