தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மைக்ரோ பைனான்ஸ் மோசடிபுகாரளிக்க போலீஸ் அழைப்பு

மைக்ரோ பைனான்ஸ் மோசடிபுகாரளிக்க போலீஸ் அழைப்பு

மைக்ரோ பைனான்ஸ் மோசடிபுகாரளிக்க போலீஸ் அழைப்பு


ADDED : ஏப் 18, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :பவானி, காலிங்கராயன்பாளையத்தில், சன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம், 2020 செப்டம்பரில் தொடங்கி, அக்டோபர் வரை ஒரு மாதம் மட்டுமே செயல்பட்டது. திருச்சி, திருமலை சமுத்திரம் வெங்கடேஷ் (எ) வேதகிரி, 39; தஞ்சாவூர் வடக்குவாசல் மேல வீதி சுதாகர் (எ) சுரேஷ், 37; விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அஸ்வின் (எ) இளந்தளிர், 30, உரிமையாளர்களாக செயல்பட்டனர். தனி நபர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் தருவதாக, நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம் முன்பணம் வசூலித்த நிலையில் தலைமறைவாகினர்.

இவர்கள் மூவரும் தென்காசி மாவட்டத்தில், இதேபோல் பைனான்ஸ் துவங்கி, பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு கைதாகினர். இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், ஈரோடு கருங்கல்பாளையத்தில் செயல்படும் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ரவிக்குமார் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் சன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் மீது, 20 பேர் மட்டுமே ஆதாரங்களுடன் புகாரளித்துள்ளனர். நிறுவனத்தினரால் பாதிக்கப்பட்டு புகார் தராமல் இருந்தால், புகார் தந்தால் இழப்பீட்டு பணத்தை வட்டியுடன் பெறலாம். விவரங்களுக்கு, 94981-72888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us