விசர்ஜன ஊர்வலத்தில் மோதல் 3 பேரை கைது செய்த போலீசார்
விசர்ஜன ஊர்வலத்தில் மோதல் 3 பேரை கைது செய்த போலீசார்
ADDED : செப் 19, 2026 05:03 AM
ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
கருங்கல்பாளையம்
காவிரி சாலை அழகரசன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை
கடந்து இரவு, 10:40 மணியளவில் ஊர்வலம் சென்றது. அப்போது மது
போதையில் இருந்த வாலிபர்கள் திடீரென சண்டையிட்டு கொண்டனர்.
குறிப்பாக
இரு வாலிபர்களை கும்பலாக வந்த வாலிபர்கள் கைகளால் சரமாரியாக
தாக்கினர். இதனால் ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார்
வந்தவுடன் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் ஓட்டம் பிடித்தது.
அடிதடியில் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக மோதலில் ஈடுபட்டனர்
என்பது தெரியாத நிலையில், இருக்கும் ஆதாரங்களை வைத்து, அவர்களை
பிடித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று, கருங்கல்பாளையம் போலீசார்
தெரிவித்தனர்.
மூன்று பேர் கைது
இதனிடையே சிலை கரைப்பு
ஊர்வலத்தில் நடந்த மோதல் தொடர்பாக, கருங்கல்பாளையத்தை சேர்ந்த
பத்தாம் வகுப்பு படிக்கும், 16 வயது மாணவன், கருங்கல்பாளையம் மரப்பாலம்
மூன்றாவது வீதி கே.ஏ.எஸ்.நகர் பிரசன்னா, 19, டிப்ளமோ கல்லுாரி
மாணவன் சந்த்ரு, 18, ஆகியோரை, கருங்கல்பாளையம் போலீசார் நேற்று கைது
செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருவதாக தெரிவித்தனர்.
