தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெண்ணின் தீக்குளிப்பு நாடகம்; போலீசார் வருத்தம்

பெண்ணின் தீக்குளிப்பு நாடகம்; போலீசார் வருத்தம்

பெண்ணின் தீக்குளிப்பு நாடகம்; போலீசார் வருத்தம்


ADDED : மார் 21, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு, சாஸ்திரி நகர், குமரன் நகரை சேர்ந்த ராஜா மனைவி காவியா, 25; இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் ராஜா தனியே வசிக்கிறார். காவியா டெய்லராக உள்ளார்.

ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு, காவியா நேற்று காலை, 11:05 மணிக்கு வந்தார். தான் கொண்டு வந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி கொண்டார். இதை பார்த்த பெண் போலீசார் உடன-டியாக, காவியா கையில் இருந்த பெட்ரோல் கேனை தட்டி விட்டனர். அவர் மீது தண்ணீரை ஊற்றி, அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் டவுன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:

கடந்த பிப்.,22ம் தேதி இரவு, மாருதி மில்க் டைரியில், காவியா பால் வாங்கியுள்ளார். சற்று நேரத்தில் பால் கெட்டுவிட்டதாக, மில்க் டைரியை சேர்ந்த கோகுல்ராஜ், 36, என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் கோகுல்ராஜ் தன் கையை கத்தியால் கிழித்து விட்டதாக கூறி, ஈரோடு அரசு மருத்துவ-மனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் அடிப்படையில் தாலுகா போலீசார் விசாரித்-தனர். இதில் காவியாவின் புகார், பொய் என்பது தெரிந்தது. இது தொடர்பாக இறுதி அறிக்கை தயார் செய்ய, காவியாவை தாலுகா போலீசார் அழைத்துள்ளனர். இந்நிலையில் தான் எஸ்.பி., அலுவலகத்தில், தீக்குளிப்பு நாடகத்தை நடத்தி-யுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

ஈரோடு ஜி.ஹெச்.சில் உள் நோயாளியாக சேர்ந்துள்ள காவியாவிடம், தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us