ADDED : ஏப் 15, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : தமிழக சட்டசபை தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. தேர்தல் ஓட்டுப்பதிவு அமைதியாக, ஜனநாயக முறையில் நடப்பதை உறுதி செய்யவும், வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி ஓட்டளிக்க வசதியாக ஈரோடு மாநகரில் நேற்று கொடி அணிவகுப்பு நடந்தது.
மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து அணிவகுப்பு துவங்கியது. ஆண்டிகாடு, இ.பி.பி. நகர், காவிரி நகர், சூளை வழியாக சி.என்.சி.கல்லுாரியை அடைந்தது. இதில் மஹாராஷ்டிரா போலீசார், 95 பேர் மற்றும் உள்ளூர் போலீசார் பங்கேற்றனர்.
அணிவகுப்பை டவுன் டி.எஸ்.பி., முத்துக்குமார் துவக்கி வைத்தார்.
