தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் கொலையானவர் குறித்து போலீசார் விசாரணை

ஈரோட்டில் கொலையானவர் குறித்து போலீசார் விசாரணை

ஈரோட்டில் கொலையானவர் குறித்து போலீசார் விசாரணை


ADDED : பிப் 05, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையத்தில், டிரை ப்ரூட்ஸ் கடை உள்ளது. கடந்த, 2ம் தேதி இரவு பூட்டிய கடை முன் சிலர் படுத்து துாங்கினர். அங்கு படுத்து துாங்க மதுபோதையில் இருந்த ஈரோடு, கொல்லம்பாளையம், கட்ட பொம்மன் வீதியை சேர்ந்த ஜோசப் மகன் பவுலோஸ்,39; கூலி தொழிலாளி சென்றுள்ளார். அப்போது அங்கு படுத்திருந்தவர்கள் இங்கு படுக்க இடமில்லை. கடைக்காரர்கள் கடைக்கு முன் படுப்பது குறித்து சத்தம் போடுகின்றனர். எனவே இங்கே படுக்க கூடாது என பவுலோசிடம் கூறியுள்ளனர்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பவுலோஸ் அங்கிருந்து நகர்ந்தவுடன், அங்கு படுத்திருந்தவர்கள் துாங்கி விட்டனர். தன்னை படுக்க அனுமதிக்காத ஆத்திரத்தில், 3 ம் தேதி அதிகாலை, 1:30 மணிக்கு வந்த பவுலோஸ், அருகே கிடந்த கருங்கல்லை எடுத்து அடையாளம் தெரியாத, 45 வயது மதிக்கதக்க நபரின் தலையில் போட்டுள்ளார்.பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார். சூரம்பட்டி போலீசார் விசாரித்து பவுலோசை கைது செய்தனர். இறந்த அடையாளம் தெரியாத நபர், தாராபுரத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தாராபுரம் சென்று விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us