/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செங்கோட்டையனின் வீட்டுக்கு 3ம் நாளாக போலீஸ் பாதுகாப்பு
/
செங்கோட்டையனின் வீட்டுக்கு 3ம் நாளாக போலீஸ் பாதுகாப்பு
செங்கோட்டையனின் வீட்டுக்கு 3ம் நாளாக போலீஸ் பாதுகாப்பு
செங்கோட்டையனின் வீட்டுக்கு 3ம் நாளாக போலீஸ் பாதுகாப்பு
ADDED : பிப் 14, 2025 07:08 AM
கோபி : கோவை மாவட்டம் அன்னுாரில், அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்காக, அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்.,க்கு, நடந்த பாராட்டு விழாவில், கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து அவர் விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த, 11ம் தேதி இரவு முதல், ஒரு எஸ்.ஐ., தலைமையில், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மூன்றாம் நாளான நேற்றும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
நேற்று செங்கோட்டையன் வீட்டில் இருந்தார். கோவில் திருவிழா மற்றும் சுபகாரியங்களுக்கான அழைப்பிதழை கொடுக்க பலர் வந்தனர். கட்சியினரும் வந்து சென்றனர். வந்தவர்களிடம் வருகையின் நோக்கம் குறித்து விபரங்களை மட்டும் கேட்டு, பண்ணை வீட்டு வளாகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர்.