/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நள்ளிரவு 'சேசிங்' சம்பவத்தில் மூவரை தேடும் போலீசார்
/
நள்ளிரவு 'சேசிங்' சம்பவத்தில் மூவரை தேடும் போலீசார்
நள்ளிரவு 'சேசிங்' சம்பவத்தில் மூவரை தேடும் போலீசார்
நள்ளிரவு 'சேசிங்' சம்பவத்தில் மூவரை தேடும் போலீசார்
ADDED : நவ 19, 2025 01:48 AM
பவானி, பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகே, புதிய பாலம் செக்போஸ்ட்டில் கடந்த, 16ம் தேதி நள்ளிரவில், பவானி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமராபாளையத்தில் இருந்து பவானி நோக்கி மாருதி 800 கார் அதிவேகமாக வந்தது. செக்போஸ்ட்டில் நிற்காததால் சந்தேகமடைந்து போலீசார் விரட்டினர். போலீசாருக்கு போக்கு காட்டி சென்ற கார், பவானி நீதிமன்றம் முன் பேரிகார்டு வைத்து தடுக்கப்பட்டதால், குறுக்குசாலையில் புகுந்து செல்ல முயன்றபோது பழுதாகி நின்றது.
இதனால் காரில் வந்த ஐந்து பேரும் இறங்கி தப்பி ஓடினர். போலீசார் துரத்தியபோது அந்தியூர் சாலையில் காடையாம்பட்டி அருகே, 30 அடி பள்ளத்தில் குதித்த, ௧௭ வயது சிறுவன் காலில் அடிபட்ட நிலையில், போலீசாரிடம் சிக்கினான். இவனை பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதேசமயம் தப்பிய நான்கு பேரை போலீசார் தேடி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், 17 வயது சிறுவனை கைது செய்தனர். பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இதனிடையே பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 17 வயது சிறுவனை போலீசார் நேற்று, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் உத்தரவுப்படி அதே கோவை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மற்ற மூன்று பேரை தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தை பொறுத்தவரை, இதுவரை போலீசாரின் நடவடிக்கை மர்மமாகவே உள்ளதாக, மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

