ADDED : ஏப் 13, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: டூவீலர் திருட்டு தொடர்பாக, ஈரோடு முத்தம்பாளையம் கே.கே.நகரை சேர்ந்த சுள்ளான் விக்கி (எ) விக்னேஸ்வரனை, 23, பிடிக்க சூரம்பட்டி போலீசார் நேற்று காலை சென்றனர்.
போலீசில் இருந்து தப்பிக்க வீட்டிலிருந்த பினாயிலை குடித்து விட்டார். ஆனாலும் அவரை பிடித்த போலீசார், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

