ADDED : ஜூலை 18, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஜூலை சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின், 220வது நினைவு தினம், அறச்சலுாரை அடுத்த ஜெயராமபுரத்தில், அரசு சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. அரசு சார்பில் அமைச்சர் முத்துசாமி தலைமயிலான தி.மு.க.வி.,னர் பொல்லான் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் தலைமையிலும் மரியாதை செலுத்தினர். பொல்லான் வாரிசுகள், பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், பொல்லான் பேரவை நிறுவனர் வடிவேல் மற்றும் த.மா.கா., - ம.தி.மு.க.,- தே.மு.தி.க.,- பா.ம.க., நாம் தமிழர் என, 5௦க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மரியாதை செலுத்தினர்.

