ADDED : ஏப் 18, 2026 05:41 AM
திருப்பூர் :தமிழக சட்டசபைக்கான தேர்தல் பணிகள் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அரசு துறைகள் அனைத்தும் பரபரப்பாக இயங்கி வருகின்றன.
தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஓட்டுச் சாவடிக்கு ஓட்டுப்பதிவு மெஷின்கள் உள்ளிட்டவை தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வயதானோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரேம்ப் எனப்படும் சாய்தள வசதி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு மேற்கொண்டு உரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டுச் சாவடிகளில் வயதான மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வசதிக்காக வீல் சேர் வசதி வழங்கப்படுகிறது. அதற்காக, கல்லுாரி மாணவர்களை தேர்தல் பணியில் பயன்படுத்தப்பட உள்ளனர். இதனையடுத்து அந்த மாணவர்களுக்கு வீல் சேர்களை இயக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இதற்கான பயிற்சி நேற்று நடந்தது. தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடி மையங்களிலும் இந்த தன்னார்வலர்கள் பணியாற்றுவர்.
