/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஏழை விவசாயி மகள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
/
ஏழை விவசாயி மகள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
ADDED : ஏப் 24, 2025 01:55 AM
தாராபுரம்:சமீபத்தில் வெளியான யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகளில், குண்டடம் பகுதியை சேர்ந்த ஏழை விவசாயி மகள், 617 வது இடத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த, யு.பி.எஸ்.சி., தேர்வுகளில், நாடு முழுவதும் பலர் பங்கேற்றனர். இதில் வெளியான தேர்வு முடிவுகளில், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடம், வெறுவேடம்பாளையத்தை சேர்ந்த விவசாயி சந்திரசேகர், ராஜேஸ்வரி தம்பதியரின் மகள் மோகன தீபிகா, 23, வெற்றி பெற்று, 617வது இடத்துக்கு வந்தார். அவருக்கு கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மோகன தீபிகாவின் தம்பி செல்வதீபக், 20, கோவையில் தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார்.

