ADDED : ஏப் 14, 2026 05:06 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வீடு தேடி சென்று, தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தொடங்கியது. இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட, 279 பேர், 40 மாற்றுத்திறனாளிகள் என, 319 பேரிடம் ஓட்டு சேகரிக்கும் பணி நேற்று தொடங்கியது. கலெக்டர் கந்தசாமியின் மாமியாரான பொன்னி, தனது ஓட்டை தபாலில் செலுத்தினார்.
* கோபி சட்டசபை தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள், 645 பேர், மாற்றுத்திறனாளிகள், 161 பேர் என, 806 பேரிடம் தபால் ஓட்டு சேகரிக்கும் பணியை, 15 குழுவினர் நேற்று தொடங்கினர்.
* பவானி தொகுதியில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 1034 பேர் தபால் ஓட்டு போட இசைவு தெரிவித்து படிவம் சமர்ப்பித்துள்ளனர். இவர்களிடம் தபால் ஓட்டு பெற, ஏழு பேர் கொண்ட குழு, 14 வாகனங்களுடன் நேற்று பணியை தொடங்கியது.
௩,௫௯௧ பேரிடம் சேகரிப்பு
மாவட்ட அளவில் நேற்று நடந்த தபால் ஓட்டு சேகரிப்பில் மொத்தம், ௩,௫௯௧ பேரிடம் ஓட்டு சேகரிக்கப்பட்டது.
