ADDED : ஏப் 12, 2026 06:12 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வீடு தேடிச்சென்று தபால் ஓட்டு பெற விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், 5,621 பேர், மாற்றுத்திறனாளிகள், 1,553 பேர் என, 7,174 பேர் விருப்பம் தெரிவித்தனர். இவர்களிடம் நாளை மற்றும் நாளை மறுதினம், ஓட்டு சேகரிக்கப்படவுள்ளது.
தொகுதி வாரியாக இவர்களின் விபரம் வருமாறு: ஈரோடு கிழக்கு: 279 முதியவர்கள், 40 மாற்றுத்திறனாளிகள், மொத்தம்-319; ஈரோடு மேற்கு:740-205-945; மொடக்குறிச்சி:863-241-1,104; பெருந்துறை:900-250- 1,150; பவானி:751-283-1,034; அந்தியூர்:694 -164-858; கோபி:645-161-806; பவானிசாகர்:749-209- 958 பேரிடம், தபால் ஓட்டு சேகரிக்கப்படவுள்ளது.
இதற்கான குழுவினர் காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை வீடு தேடி வருவர். ஓட்டளிக்கும்போது தொகுதி வேட்பாளர்களின் முகவர்கள் உடனிருக்கலாம். முதல் வாய்ப்பில் ஓட்டுப்போட முடியாதவர் களுக்கு, 16ம் தேதி இறுதி வாய்ப்பு வழங்கப்படும்.
