ADDED : ஏப் 15, 2026 06:50 AM
ஈரோடு : ஈரோடு
மாவட்டத்தில், 8 தொகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்டோர்,
மாற்றுத்திறனாளிகள், 91.35 சதவீதம் தபால் ஓட்டை பதிவு
செய்துள்ளனர்.
இதில் தபால் ஓட்டுக்கு முதியோர், 5,641 பேர்,
மாற்றுத்திறனாளிகள், 1,539 பேர் என, 7,180 பேர் விருப்பம்
தெரிவித்திருந்தனர். இவர்களிடம் ஓட்டை பெற, 101 குழு அமைத்து முதல்
நாளில், 49.86 சதவீதமாக, 3,580 பேர் தபால் ஓட்டை பதிவு செய்தனர்.
இரண்டாவது
நாளான நேற்று ஈரோடு கிழக்கு-148, ஈரோடு மேற்கு-417,
மொடக்குறிச்சி-464, பெருந்துறை-497, பவானி-474, அந்தியூர்-360,
கோபி-297, பவானிசாகர்-322 பேர் என, 2,979 பேர் தபால் ஓட்டு பதிவு
செய்தனர்.மொத்தமுள்ள, 7,180 பேரில், 6,559 பேர் (91.35 சதவீதம்) தபால் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.
விடுபட்ட, 621 பேருக்கு வரும், 16ல் இறுதி வாய்ப்பாக ஓட்டை பெற தொடர்பு கொள்வார்கள்.
