ADDED : மே 10, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை, சென்னிவலசை சேர்ந்தவர் காமராஜ், 55, பாத்திர வியாபாரி. மனைவி அமுதா. தம்பதியருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். காமராஜ் வியாபாரத்தை முடித்து விட்டு, பைக்கில் வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை திரும்பினார். பெருந்துறை-ஈரோடு ரோடு தென்றல் நகர் அருகே, சாலையோர சாக்கடையில் பைக்குடன் விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
