/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொட்டுச்சாமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
பொட்டுச்சாமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 03, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள சங்கராப்பாளையம் பொட்டுச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம், காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.
முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 7:00 மணிக்கு, கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சங்கராப்பாளையம், வேலாயுதபுரம், வட்டக்காடு, பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

