/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10ம் வகுப்புக்கு வரும் 23ல் செய்முறை தேர்வு துவக்கம்
/
10ம் வகுப்புக்கு வரும் 23ல் செய்முறை தேர்வு துவக்கம்
10ம் வகுப்புக்கு வரும் 23ல் செய்முறை தேர்வு துவக்கம்
10ம் வகுப்புக்கு வரும் 23ல் செய்முறை தேர்வு துவக்கம்
ADDED : பிப் 18, 2026 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வரும், 23ல் துவங்கி 28 வரை பொது தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வு நடக்க உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 11ல் துவங்கி ஏப்.,6ல் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் மாணவ, மாணவியருக்கு வரும் 23 முதல் 28 வரை செய்முறை தேர்வு நடக்கிறது. மொத்தம் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகள் 210, தனியார் பள்ளிகள் 109ஐ சேர்ந்த 24,470 மாணவ, மாணவியர் செய்முறை தேர்வு எழுதுகின்றனர். ஏற்பாடுகளை பள்ளி கல்விதுறையினர் செய்து வருகின்றனர். இத்ததகவலை முதன்மை கல்வி அலுவலர் மான்விழி தெரிவித்தார்.