/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தியமங்கலத்தில் மழை வேண்டி யாகம்
/
சத்தியமங்கலத்தில் மழை வேண்டி யாகம்
ADDED : மே 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் : மழை பெய்ய வேண்டி, சத்தியமங்கலத்தில் நேற்று யாக பெரு வேள்வி நடந்தது.
சாந்தலிங்க மருதாசலம் அடிகளார், பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். வேள்வி வழிபாடுகளை சாந்தலிங்கர் அருள் நெறி மன்ற பேரூராதீனம் நடத்தினார். கோமாதா பூஜையை தொடர்ந்து திருவிளக்கு பூஜை, புனித நீர் வழிபாடு, வருண பகவான் வழிபாடு, நடந்தது. மூத்த பிள்ளையார் வேள்வி, மலர் அர்ச்சனை திருமுறை விண்ணப்பம் வேண்டுதல், அதை தொடர்ந்து நீரில் நின்று பதிகம் ஓதுதல், விநாயக பெருமானுக்கு தீர்த்த நீராட்டு, அலங்கார வழிபாடு நடந்தது. இதில் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.