ADDED : மே 20, 2026 05:46 AM

அ நிறம் | அளவு
நம்பியூர்:நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையம் குமாரசுவாமி குமரன் குன்று முருகன் கோவில் உள்ளது. விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், கோவிலில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இதன் ஒரு பகுதியாக வருண பகவானுக்கு சிறப்பு பூஜை, வருண சூக்த ஜெபம் செய்யப்பட்டது. சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
