/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கல்
/
மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : ஜூன் 05, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில், ஏப்.,28 முதல் நேற்று முன்தினம் வரை பல்வேறு கல்லுாரி மாணவர்களுக்கு, அருங்காட்சியகம் தொடர்பான பயிற்சி நடந்தது.
காட்சி பொருட்களான நாணயம், ஓவியங்கள், கற் சிற்பங்கள், ஓலை சுவடிகளை காட்சிபடுத்துவது, பராமரிப்பது போன்ற பயிற்சிகளும், மரபு நடை பயணமாக கலைமகள் பள்ளியில் உள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
பயிற்சி விழா நிறைவு நேற்று நடந்தது. தனியார் கல்லுாரி வரலாற்று துறை இணை பேராசிரியர் ரதிப்பிரியா, பயிற்சிக்கு வந்த, 70 மாணவ,மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார். அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி உடனிருந்தார்.