ADDED : செப் 23, 2026 07:36 AM

ஈரோடு:ஈரோட்டில்
ரயில்வேக்கு சொந்தமான காலியிடங்கள் ஏராளமாக உள்ளன. தற்போது
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய குடியிருப்புகளை முழுமையாக ரயில்வே
நிர்வாகம் இடித்து விட்டது.
இங்கு புதிதாக குடியிருப்புகள்
கட்டப்படுமா? அல்லது வேறு பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ளப்படுமா
என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஈரோடு சாஸ்திரி நகரில்
ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், 550க்கும் மேற்பட்டோர் பட்டா போட்டு
வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு
கிடைக்கவில்லை.இந்நிலையில் ரயில்வே குடியிருப்புகளை இடித்த
நிலையில் காலியாக உள்ள நிலத்தை தனி நபர்கள், பொது அமைப்புகள்,
உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி விட
கூடாது என்பதற்காக ரயில்வே நிர்வாகம், தங்களுக்கு சொந்தமான
இடத்தில் இரும்பு துாண்களை அமைத்து வேலி போடும் பணியை
மேற்கொண்டுள்ளது.
